யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். கொடிகாமம், கச்சாய் வீதியில் துவிச்சக்கரவண்டியொன்றுடன் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய குலேந்திரநாதன் பிருந்தன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய எஸ்.சதீஸ்தரன் என்ற பிரதேசசபை ஊழியருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.