கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த நான்காம் திகதி தமது வீட்டிலிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக தேற்றாத்தீவை சேர்ந்தவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் கொள்ளையர்கள் தொடர்பில் எதுவித தடயங்களும் இல்லாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் பாண்டிருப்பு, மருதமுனை, ஏறாவூர், களுவாஞ்சிகுடி, போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.