விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள முன்னணி விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விளையாட்டு உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா, மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.