ஓமந்தை மத்திய கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரிக்கு தகுதியான ஒருவரை அதிபராக நியமனம் செய்யாமல், ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்பட்டு நிதி மோசடிக் குற்றச்சாட்டப்பட்ட ஒருவரை அதிபராக நியமனம் செய்துள்ளனர் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,

குறித்த அதிபரான கந்தையா தனபாலசிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிதிமோசடி, பொது கணக்காய்வாளரால் வழங்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு அடிப்படையில் மோசடி செய்யப்பட்ட நிதியை மீளப்பெற கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்பட்ட அதிபர் அவருக்கு பதவி உயர்வு வழங்கியமை, கல்வி அமைச்சு பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது என்பதை ஆணைக்குழு கண்டறிந்துள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு கேட்டுக்கொள்கின்றது.

இவ்விசாரணை அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் பிரியதர்சன தலைமையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியினால் நெறிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers