நான்கரை இலட்சத்தைத் தாண்டும் இலங்கை இலவச வை-பை சேவையின் பயனாளர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கையில் வை-பை சேவை வழங்கப்பட்ட நாள் முதல் தற்பொழுது வரை சுமார் 80000 ஜி-பி அளவு தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதம மந்திரியின் அலுவலகத்தில் கொள்கை அபிவிருத்திப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வை-பை வசதிகளைப் பயன்படுத்திவோரின் எண்ணிக்கை நான்கரை இலட்சத்தைத் தாண்டுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இலவச வை-பை திட்டத்தின் கீழ் 1176 இடங்களில் வை-பை வசதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.