100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பதுளை, வேவெஸ்ஸ தோட்டத்தில் 50 வீடுகளும், தெல்பெத்த தோட்டத்தில் 50 வீடுகளும் அடங்களாக 100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 100 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், ஊவா மாகாணசபை உறுப்பினர் ருத்தரதீபன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மலையக மக்களின் 200 வருட தொடர்வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடைசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த புதிய வீடுகள் ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Latest Offers