கந்தளாய் அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலய வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் தற்காலிக கொட்டில்களில் தமது கல்வியை கற்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலை பெற்றோரிடம் இன்று எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் மண் தரையில் பாய்களை போட்டு அமர்ந்து தமது கல்வியை கற்று வருகின்றனர். இதை பொறுப்பு வாய்ந்த கல்வி அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளமலிருப்பது ஏன்? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பாடசாலை தளபாடங்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமை மற்றும் பல பௌதீக வள பற்றாக்குறைகளுடன் இயங்கி வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கந்தளாய் அல் தாரீக் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இப்பாடசாலையினை கருத்தில் கொண்டு வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பிரதேச பெற்றோர்களும், பாடசாலை அதிபரும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுக்கின்றனர்.