பெண்ணொருவரின் கழுத்திலிருந்து தங்க மாலையை அறுத்து சென்ற அடையாளம் தெரியாத நபர்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - களுதாவளை பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணின் கழுத்தில் இருந்து 3 பவுண் தங்க மாலை அடையாளம் தெரியாத நபரால் அறுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபரே தங்க மாலையை அறுத்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மிக அண்மைக்காலமாக இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.