மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மனித பயன்பாட்டிற்கு பொருத்தமில்லாத தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு அமைய தரமான தேங்காய் எண்ணெய்க்காக விவரத்துண்டு ஒட்டப்படவுள்ளதாகவும், தேங்காய் எண்ணெய் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தேங்கை எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழை வழங்கவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசுத்தமான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் இடங்கள் தொடர்பான தகவல்களை 112 50 25 01 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.