வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ். நகர் இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சிந்தனைக் கூடத்தில் இன்று காலை இக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வுபெற்ற கல்வியாளர்களை ஒன்றிணத்து மக்களுக்கு குரல் கொடுக்கும் முகமாக "பணி நிறை பல்கலைக்கழக கல்வியாளர் ஒன்றியம்" எனும் பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு முன்னாள் முதலைமச்சர் அ.வரதரஐப்பெருமாள், பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் உட்பட பல்கலையிலிருந்து ஓய்வுபெற்ற கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.