வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விபுலானந்தா கல்லூரியின் கணினி அறையில் திடீரென தீ பற்றியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

அதன்பின் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்னொழுக்கினால் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.