வவுனியாவில் தமிழ்மாருதம் பண்பாட்டு நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில், கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மாருதம் பண்பாட்டு பெருவிழா இடம்பெற்றுள்ளது.

வவுனியா, விபுலானந்தர் சிலை முன்பாக நேற்று காலை பண்பாட்டு ஊர்வலம் ஆரம்பமாகி நகரசபைக் கலாச்சார மண்டபத்தை வந்தடைந்துள்ளது.

வவுனியா, நகரசபைக் கலாச்சார மண்டபத்தில் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றயதினம் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தமிழகத்திலிருந்து பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியசுடர் த.இராமலிங்கம், நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும், மலிவு விற்பனையும் இடம்பெற்றுள்ளது.

Latest Offers