மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மரணம்!

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமான வழக்குடன் தொடர்புடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு கைதி தாக்கியதால் இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் மற்றுமொரு கைதி வேறு சிறைக் கூண்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.