தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு

Report Print Manju in சமூகம்
457Shares

சீதுவ அமன்தொழுவ பிரதேசத்தில் யுவதியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி தங்கியிருந்த அறையில் துணியால் தூக்கில் தொங்கி நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர்.

காதல் தொடர்பு காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரண பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸ் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.