கடற்படையினரின் பஸ் மோதி பெண்ணொருவர் படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கண்டி பிரதான வீதி மட்டிக்கழி பகுதியில் கடற்படையினரின்பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 4.10மணியளவில் இடம் பெற்றுள்ளது. மட்டிக்கழி பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த கடற்படையினரின் பஸ்ஸுடன்மோட்டார் சைக்கிள் குறுக்கே போட்டமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் திருகோணமலை - மட்டிக்கழி பகுதியைச் சேர்ந்த கே. தமிழரசி(38வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.