மீண்டும் எரிபாருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எதிர்வரும் மாதங்களுக்கான புதிய எரிபொருள் விலை நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த மாதம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரையில் 55 டொலருக்கு காணப்பட்ட மசகு எண்ணெய், ஒரு வாரம் என்ற சிறிய காலப்பகுதிக்குள் 60 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் ஒபெக் அமைப்பினால் எரிபொருள் தயாரிப்பு மட்டுப்படுத்தப்பட்டமையினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உலக சந்தையில் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை தினம் கூடவுள்ள எரிபொருள் சூத்திர குழுவினால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கமைய எரிபொருள் விலை அறிவிக்கப்படவுள்ளது.

அதற்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது