மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஒன்று கூடுமாறு அழைப்பு

Report Print Theesan in சமூகம்

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த இருக்கும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளுமாறு வடக்கு, கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமையத்தின் ஊடக பேச்சாளர் கே.தேவராயா அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமையத்தின் நிர்வாக கூட்டம் நேற்றைய தினம் வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த இருக்கும் ஆர்ப்பாட்ட பேரணியின் போது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் சகல பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட சகல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் சார்பில் முழுமையான அழைப்பை நாங்கள் விடுத்துள்ளோம்.

அந்த வகையில் எதிர்வரும் 16ஆம் திகதி பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் இப்பேரணியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட அமைப்பின் பிரதிநிதிகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த எமது சமூகமும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதன் நோக்கம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் ஏறத்தாள 40,000இற்கும் மேற்பட்டவர்களாக இருந்தும் பர்ணகமுவ ஆணைக்குழுவின் பதிவேட்டின்படி 19,947இற்கு மேற்பட்டவர்கள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்

அந்தவகையில் இதுவரையிலும் யுத்தம் ஓய்வுக்கு வந்து பத்து ஆண்டுகளை பூர்த்தியாகி கொண்டு இருக்கும் நேரத்திலும் அரசோ, அரசு சார்பானவர்களோ, அரச அதிகாரிகளோ இந்த காணாமல் ஆக்கப்படவர்களின் விடயத்தில் ஆக்க பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த வருடம் இறுதியில் தென்னிலங்கை அரசியலில் தளம்பல் நிலை ஏற்பட்ட போது அந்த தளம்பல் நிலையிலிருந்து ரணில் விக்ரமசிங்கவையும், ரணில் அரசாங்கத்தையும் காப்பற்றுவதற்காக எம் மக்கள் எமது தேவைக்காக, எமது விடிவுக்காக, எமது போராட்டத்தை வலுபெற செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏறாத்தாழ 15பேர்.

அரசுக்கு முண்டு கொடுத்து அரசை பாதுகாத்து இருந்தார்களே ஒழிய அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி எமக்குள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களாக இருந்தால் இன்று எமது போராட்டம் இவ்வாறாக தெருவோரங்களில் தொடர்ச்சியாக நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.

இன்றைய காலகட்டத்தில் அரசை பாதுகாத்து கொண்டு இருப்பதற்கு எம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையே நிச்சயம் தேவையாகவுள்ளது. அந்த வகையில் எம்மால் தேர்த்தேடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது விடுவிற்காக இந்த அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டங்கள், காணி ஆக்கிரமிக்கான தீர்வு இவை அனைத்தையும் ஒரு எழுத்து மூலமான ஒரு அங்கிகாரத்தை அரசிடம் பெற்று அவர்களுக்குரிய ஆதரவை வழங்கலாம்.

ஆனால் எந்த ஒரு எழுத்து மூலமான அறிவித்தலையும் பெறாமல் தமது சொந்த தேவைக்காக இந்த அரசை பாதுகாப்பதற்காக எந்த நேரத்திலும் கையை உயர்த்தி கொண்டு நிற்கின்றார்கள்.

இன்று உதாரணத்திற்கு எடுத்து கொள்வோமாக இருந்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாக்கள் இம்முறை பாதுகாப்பு செலவீனங்களுக்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க பட்டிருந்தும் எமது விடிவிற்காகவோ, இந்த காணாமல் ஆக்கப்படவர்களின் விடிவிற்காகவோ இந்த காணிகளை இழந்து நிற்கும், வீடுகளை இழந்து நிற்கும் எம் உறவுகளின் காணிகளை பெற்றுகொடுப்பதற்காகவோ அல்லது அரசியல் கைதிகள் என்ற போர்வையில் இன்று பல ஆண்டுகளாக சிறையில்

வாடிகொண்டிருக்கும் இளைஞர்களை மீட்பதற்காகவோ ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாத நிலையில் இதற்கு ஒத்துழைப்பும் வழங்காத நிலையில் இம்முறை வருகின்ற வரவு செலவு திட்டத்தில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய போகின்றார்கள்.

மீண்டும் அவர்கள் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க போகின்றார்களோ. அல்லது எமது தேவையை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்த போகின்றார்களோ என்பது எமக்கு தெரியாது.

அந்தவகையில் மக்கள் போராட்டமாக எம்மை மாற்றிகொண்டிருக்கும் இந்த போராட்டம் வலுப்பெற்று பெரியதோர் போராட்டமாக வடக்கு, கிழக்கில் மேற்கொள்வதற்கு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆகவே எம்மக்கள் யாவரும் ஒன்றிணைந்து இந்த 16ஆம் திகதி மேற்கொள்ள இருக்கும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு யாழ்ப்பாண பலகலைகழகத்தில் ஒன்று கூட வேண்டுமென்று கேட்டுகொள்வதாக கேட்டுகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.