வவுனியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கடந்த மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து வவுனியா கண்டி வீதியில், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு அருகில் வைத்து இடம்பெற்றிருந்தது.

இதன்போது இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிளுடன், முச்சக்கரவண்டி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த மு.வசந்தகுமார் என்ற 22 வயது இளைஞனே மரணமடைந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.