பாலைவனமாக மாறும் கொழும்பு! அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் என்ன?

Report Print Vethu Vethu in சமூகம்

தலைநகர் கொழும்பில் அதிகளவான வெப்ப நிலை ஏற்பட வாகனங்களே காரணம் என வான்வெளி ஆராய்ச்சியாளர் சீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் வெப்பமான காலநிலை அதிகரித்துள்ள நிலையில் அது கொழும்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பில் அதிக மரங்களை வெட்டி அழித்தமை மற்றும் பாரியளவில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையே அதிக வெப்பத்திற்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொழும்பில் வாகனங்களின் பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளமையினாலும் வெப்ப நிலை தீவிரம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும் சிக்கமான பயன்படுத்துமாறும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளமையினாலும், மழையற்ற காலநிலை காரணமாகவும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.