பிரபல தென் இந்திய எழுத்தாளர் வித்யாசாகர் சம்மாந்துறைக்கு விஜயம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தமிழா ஊடக வலையமைப்பின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபல தென் இந்திய பன்முக எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர் வித்யாசாகர் கவியரங்கில் தலைமை தாங்குவதற்காக வருகை தந்துள்ளார்.

குறித்த நிகழ்வு சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, தமிழா ஊடக வலையமைப்பின் தலைவர் எஸ்.எம்.ஜலீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, நாவலர் ஈழமேகம், பக்கீர் தம்பி, ஆகியோர் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளனர்.