வசந்த கரணாகொட நாளை சீஐடியில் ஆஜராகிறார்

Report Print Ajith Ajith in சமூகம்

பல வாரங்களாக பொலிஸாரிடம் இருந்து மறைந்திருந்த கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட நாளை சீஐடியில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே அவர் நாளை சீஐடியில் ஆஜராகவுள்ளார்.

வசந்த கரணாகொடவை கைது செய்ய கடந்த வியாழக்கிழமை தடைவிதித்த உயர்நீதிமன்றம் நாளை சீஐடியில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

2008 -2009 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்ததாக வசந்த கரணாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த பெப்ரவரி 21ஆம் திகதியில் இருந்து கரணாகொட பொலிஸாரிடம் இருந்து மறைந்து வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers