விபத்தில் சிக்கிய பொரல்ல போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

வாகனம் ஒன்றில் மோதி விழுப்புண் அடைந்திருந்த பொரல்ல போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.சரத்சந்ர நேற்று காலமாகியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரழந்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் தமது மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது கடந்த பெப்ரவரி 24ஆம் திகதியன்று பம்பலபிட்டியில் வைத்து டிபென்டர் ரக வாகனம் ஒன்றில் மோதி படுகாயங்களுக்கு இலக்காகியிருந்தார்.

இந்த நிலையில் வாகன சாரதி உட்பட்ட கைது செய்யப்பட்ட 8 பேரில் ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வாகன சாரதி மாத்திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers