நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டபத்தை நேரில் சென்று பார்வையிட்ட ரவூப் ஹக்கீம்

Report Print Mubarak in சமூகம்

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டபத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் ஒரே நேரத்தில் 2,300 பேர் அமரக்கூடிய வகையில் 3 மாடிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டு வந்த நிலையில் அதனை இடை நடுவில் நிறுத்தியது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன்,கட்டடத்தினை நிறைவுப்படுத்தல் தொடர்பாக தாம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் மற்றும் அரசியல் சார்ந்தோர், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.