சட்டவிரோதமாக சிகரட் தொகையை கொண்டு வந்த நபர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

19 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகையொன்றை சட்டவிரோதமாக கொண்டு வந்த நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கண்டியை சேர்ந்த 47 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பயணப்பொதியில் மறைத்து கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த சிகரட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட் தொகைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.