யாழில் வயோதிப பெண்ணொருவரை கொலை செய்ய முயற்சித்த நபர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். கொடிகாமம், எருவன் பகுதியில் வைத்து நபரொருவர் வயோதிப பெண் ஒருவரை தாக்கி அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான பெண் கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியை என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு அவர் வீதியில் சென்ற வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers