கொக்கட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியிலேயே இந்த முற்றுகையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் பெருமளவான கசிப்பினையும் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தாண்டியடி விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஐ.எம்.வஹாப் தெரிவித்தார்.

இதன்போது 1260000 மில்லி லீற்றர் வடி சாராயம் வடிப்பதற்கு பயன்படுத்தப் படும் கோடா 10000 மில்லி லீற்றர் வடி சாராயம் வடிசாரயம் வடிப்பதற்கு பயன் படுத்தப்பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

ஜனாதிபதியின் சட்ட விரோத போதை வஸ்துகளை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் மற்றும் தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Latest Offers