கிராமத்துக்கு சிறிகொத்த நிகழ்வு ஆரம்பம்

Report Print Mubarak in சமூகம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் "கிராமத்துக்கு சிறிகொத்த" எனும் செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் களுத்துறையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஒருபகுதியாக பேருவளை தொகுதிக்கான நிகழ்வு பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் வழிகாட்டலில் பேருவளை தொகுதி அமைப்பாளர் மேல்மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீளின் பங்குபற்றலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் பேருவளை தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.