வன்னி நாடாளுமன்ற உறுப்பினரினால் வவுனியாவில் ஏழைக் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

Report Print Suman Suman in சமூகம்

வவுனியா திருநாமக் குளம் பகுதியில் வசித்துவரும் ஏழைக் குடும்பம் ஒன்றின் பாவனைக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

30 வருடங்களுக்கு முன்பு இனக் கலவரம் காரணமாக மதவு வைத்த குளத்தில் இருந்து பம்பைமடு மற்றும் செட்டிகுளம் போன்ற இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தவர்களில் இந்த ஏழைக் குடும்பமும் ஒன்று.

அவர்களால் நிலையான வாழ்வையோ நிரந்தர வேலையையோ பெற்றுக் கொள்ள கல்வி தரமும் அதைக் கற்பதற்கான சூழலும் அமையாத நிலையில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் சிரம்மப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்களின் துன்பங்களை நேரில் கண்டவர்கள் டென்மார்க்கில் இருந்து உதவி வரும் வாணி சமூக சுய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினருக்கு அவர்கள் நிலையை தெரியப்படுத்தியுள்ளனர்.

இதற்கு அமைவாகவே அவர்களுக்கு இவ் வீடு கட்டப்பட்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.