தென்னிலங்கையில் பாரிய அபிவிருத்தித் திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் பாரிய இரண்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும்.

குறித்த இரண்டு திட்டங்களிலும் உள்ள தொழில் வாய்ப்புகள் நாட்டு இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.