கொழும்பில் களியாட்ட விடுதிகளுக்கு அருகில் சுற்றிவளைப்பு! நாட்டின் பிரபலங்கள் சிக்கினர்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு அருகில் தீவிர சோதனையிடுவதற்கான நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர விடுதிக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டிபெண்டர் கலாச்சாரம் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படவுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டு நபர்களை கைது செய்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் குடிபோதையில் வாகனம் செலுத்திய ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 527 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகமாக சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் உயர்மட்ட வர்த்தகர் என தெரியவந்துள்ளது.