வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் அதிகளவான விபத்துகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளிலேயே அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

வீதி விபத்துக்களானது அதிகளவாக வெள்ளிக்கிழமைகளிலேயே அதிலும் குறிப்பாக மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரையான நேரத்திற்குளேயே நடைபெறுகின்றன.

கடந்தாண்டு இடம்பெற்ற 35,000 விபத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூலம் 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்ட சாரதிகளே விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers