நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் பல தடைகள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் பல தடைகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார்.

இந்த தடைகளை இல்லாமல் ஆக்குவதற்கு எல்லோருடைய பங்களிப்பும் கிடைத்தால் நிச்சயமாக நிலுவை கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வீறுகொண்டெழுவாய் பெண்ணே புதுயுகம் காண்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

1992ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்த பேச்சவார்த்தை நடத்தி வருகின்றோம். முதல் சம்பளமாக சத கணக்கில் ஆரம்பித்து அதன் பிறகு ரூபா கணக்கிலும், தற்போது நூறுரூபா கணக்கிலும் பெற்று வருகின்றோம்.

சில காலங்களில் பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் இருந்த போதிலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தோம்.

கடந்த காலத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது, சிலர் இடைக்கால கொடுப்பனவு என கூறி நூறு ரூபாய் வீதம் பெற்றுக் கொடுத்தார்கள்.

அன்று நான் மஸ்கெலியா பகுதிக்கு சென்ற போது மக்கள் என்னிடம், கொடுத்த நூறு ரூபாய் பணத்தையும் தோட்ட நிர்வாகம் அறவிட்டு கொண்டதாக சுட்டிக்காட்டினார்கள்.

இவர்கள் வாங்கி கொடுத்த கொடுப்பனவுகள் காரணமாக 88,000 ரூபா மக்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தின் போது மூன்று மாதம் பேச்சுவார்த்தை நடத்திவந்தோம்.

ஆயிரம் ரூபாய் கிடைக்காவிட்டால் 30ஆம் திகதி எனது பதவியை இராஜினமா பன்னுவேன் என கூறினேன். திடிரென அரசாங்கம் மாறியது. புதிய பிரதமராக வந்தவரிடம் இது தொடர்பாகபேச்சுவார்த்தை நடத்திய பொழுது அவர் இதனை தருவதாக கூறினார்.

இருந்த போதிலும் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த பொழுது நான் 9 நாள் போராட்டம் செய்ய மக்களை அழைத்தேன். நீங்கள் முழு ஆதரவு ஒத்துழைப்பு வழங்கினீர்கள். இதன்போது சிலர் ஆதரவு வழங்குவதாக வந்தார்கள்.

ஆனால் அந்த ஆதரவு நேர்மையான மனம் சுத்தமானது அல்ல என தெரிந்துக் கொண்டேன். போராட்டத்தின் 9ஆவது நாள் இவர்கள் அரசாங்கம் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது போல் ஆர்ப்பாட்டத்தை திசைதிருப்பி இதையெல்லாம் செய்தது காங்கிரஸ் என குற்றம் சுமத்தினார்கள்.

அதன் காரணமாக நான் இந்த போராட்டத்தில் இருந்து நான் விலகி கொண்டேன். வந்தவர்கள். இதயசுத்தியுடன் இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் அல்ல. 1200 ரூபாய் பெற்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers