துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் சடலம் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடுவலை - கொடல்லவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதி மக்கள் தகவல் அறிவித்த நிலையிலேயே இன்று காலை அப்பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட நபர் 35 வயதுடையவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் அவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சடலத்தின் அருகிலிருந்து இருந்து டி-56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் இரவைகளின் பகுதிகள் சில மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.