கொட்டகலை சென்கிளயார் பகுதியில் தீப்பரவல்! 100 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

Report Print Sinan in சமூகம்

தலவாக்கலை - கொட்டகலை பகுதியில் சென்கிளயார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள மானா பகுதியில் ஏற்றபட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 100 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் பணியாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனப்பகுதிக்கு அடையாளந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...