திருகோணமலையில் மின்தடை

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையில் மூன்று நாட்கள் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை - கிண்ணியா, வெள்ளைமணல், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் இம்மாதம் 11ஆம், 14ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை Grid sub ஸ்டேஷனில் உள்ள மின்மாற்றிகளில் ஒன்று பராமரிப்புக்காக செயலிழக்க செய்யப்படுகின்றது. இதன் காரணமாகவே மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாற்று நடவடிக்கை மூலம் மின் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மின் வழங்கப்படலாம் என மின்சார சபையின் கிண்ணியா பிரதேச பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.