மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்! இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க என்ன கூறுகிறார்?

Report Print Jeslin Jeslin in சமூகம்

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இராணுவத்தை குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர் என இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழிக்கு இராணுவமே பொறுப்பு என்று அனைத்துலக சமூகத்திடம் கூறுவதற்கு பலரும் தயங்கவில்லை.

எல்லாவற்றுக்கும் இராணுவம் மீது குற்றம்சாட்டுகின்ற ஒரு வழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து தரப்பினரும், ஏனையவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்னதாக, விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைப் பெற்று உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.