நுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ விபத்து

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா - கண்டி பிரதான வீதி, பழையக் கடைபகுதிக்கு செல்லும் வழியிலுள்ள இரு வியாபார நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் அந்த நிலையங்கள் முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளன.

அணிகலன்கள் விற்பனை நிலையமொன்றும், புதிததாக திறக்கப்படவிருந்த உணவகமொன்றுமே இவ்வாறு முற்றாக எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரியவருகிறது.

பிரதேச பொது மக்கள், நுவரெலியா பொலிஸார், மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், மின்சார ஒழுக்கு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்ந நிலையில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.