மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்? கட்டவிழும் யாழ். மன்னனின் கதைகள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் யாழ்ப்பாண மன்னனால் கொல்லப்பட்டவர்கள் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் ரி.ஜி.குலதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

1550ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிறிஸ்தவ மதத்தை தழுவியமைக்காக போர்த்துக்கேயர் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு, யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனால் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடமே மன்னார் மனிதப் புதைகுழி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.