மட்டக்களப்பில் யுவதியொருவரின் சடலம் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மாவடிவேம்பு - 02, மணிவாசகர் வீதியை அண்டிய பகுதியை சேர்ந்த சிவானந்தம் ஜானு என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் 3 வயது குழந்தையின் தாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.