கிளிநொச்சியில் இன்று வரை அகற்றப்படாமல் உள்ள கழிவுகள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வின் போது வீசப்பட்ட கழிவுகள் இன்று வரை அகற்றப்படாமல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் கடந்த 8ஆம் திகதி காலை மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதன் போது நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட குளிர்ப்பான வெற்றுக் கோப்பை மற்றும் பொலித்தீன் என்பன குறித்த சுற்றுச்சூழலில் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.

இந்த மண்டபத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களே நிகழ்வு முடிந்தவுடன் கழிவுகளை அகற்ற வேண்டிய போதும், இன்று மூன்று நாட்களாகியும் மண்டபத்தில் கழிவுகள் அகற்றப்படாமை குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.