இலங்கை நோக்கி வந்த பெண் நடுவானில் மரணம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி வருகைத்தந்த பெண் ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.