சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற நபர் மரணம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

பதுளை – கெந்தகொல்ல பகுதியை சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்துள்ள நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.