மொரட்டுவையில் சிக்கிய 161 கிலோ ஹெரோயின்! நீளும் மதுஷ் குழுவினரின் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

மொரட்டுவ, ராவதாவத்த பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகந்துர மதுஷின் குழு உறுப்பினர் கெலுமா என்பவரின் வீட்டில் இருந்தே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து 5000இற்கும் அதிகமான ரி 56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.