வவுனியா குளங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபைக்குட்பட்ட குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா வேப்பங்குளம் மற்றும் கறையான் குளம் என்பவற்றை நகரசபை தவிசாளர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர் லரீவ், தவிசாளரின் பிரத்தியேக செயலாளர் சஜீந்திரா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன்போது குறித்த குளங்களில் குப்பைகளை வீசுவது கண்டறியப்பட்டுள்ளதுடன், குப்பைகளை வீசுவோரை அடையாளப்படுத்தும் சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த தவிசாளர், இனி வரும் நாட்களில் குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.