வயலுக்குச் சென்ற விவசாயி மாயம்!

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட றாணமடு பகுதி விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

அம்பாறை - மத்தியமுகாம் 6 ஆம் பிரிவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட றாணமடு பகுதியிலுள்ள அவரது வயலுக்கு நேற்று சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

மத்தியமுகாம் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான, கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த வயற் பகுதியில் அமைந்துள்ள காட்டுக்குள், அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும், தலைக்கவசமும் வீழ்ந்து கிடப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.