மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை உயிாிழப்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 ஏக்கர் தவணைக் கண்ட வயல் வெளிப் பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக குறித்த யானையின் சடலம் காணப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகை தந்து அதனை பார்வையிட்டு செல்கின்றனரே தவிர அதனை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லையென விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதனால் தமது அற்றாட இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் இருந்து யானையின் உடலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.