சிலாவத்துறையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் "மெசிடோ" சந்திப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட சிலாவத்துறை மக்கள் கடந்த 20 நாட்களாக தங்களுடைய பூர்வீக நிலத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுத்த காலப்பகுதியில் கடற்படையினர் குறித்த காணியில் தங்கள் முகாம்களை அமைத்த போதிலும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடக்க போகின்ற நிலையில் இதுவரை தங்களுடைய காணியை விடுவிக்கவில்லை எனவும் தங்களுடைய காணிகளை கடற்படையினர் விடுவித்து வேறு அரச காணிகளில் முகாம்களை அமைக்குமாறு கூறி சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த மக்களின் போராட்டத்துக்கு பல்வேறுபட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் இப் போராட்டத்திற்கு ஆலோசனை வழங்கும் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான (மெசிடோ) நிறுவனத்தின் குழுதலைவர் ஜாட்சன் தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

இச் சந்திப்பில் குறித்த போராட்டம் தொடர்வது சம்பந்தமாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்ட முறைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதே நேரத்தில் மக்கள் குறித்த போராட்டத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றியும் கடற்படையினரால் விளைவிக்கப்படும் இடையூறுகள் சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Offers