போதைப் பொருள் வழக்குடன் தொடர்புடைய பெண் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை ஐந்தாம் கட்டைப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கந்தளாய் நீதிமன்றில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத அப்பெண்ணை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் கடந்ந வருடம் கந்தளாய் பிரதேசத்தில் வைத்து பத்து மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் விடப்பட்ட நிலையிலே பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபரான பெண்ணின் கணவர் ஹெரோயின் வியாபாரி என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers