அரசுடமையாக்கப்பட்ட கடற்தொழில் உபகரணங்கள் ஏல விற்பனை

Report Print Mohan Mohan in சமூகம்
67Shares

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட கடற்தொழில் படகு இயந்திரங்கள் மற்றும் வலைகள், படகுகள் என்பன இன்று பகிரங்கமாக ஏலவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - நீரியல்வள திணைக்கள அலுவலக வளாகத்தில் கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஏல விற்பனையின் போது அதிகளவிலான மீனவர்கள் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

நீரியல் வள திணைக்களத்தினால் ஒரு பழைய படகு இயந்திரம் ஒன்றின் கூறு விலையாக 25000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் மீனவர்களின் கேள்வி விலை அதிகரிப்பின் காரணமாக 199000 ரூபாய் வரை அதிகரித்து காணப்பட்டது.

மேலும் பழை படகுகள் பெறுமதியான வலைகள் இயந்திரங்கள் என்பன நீரியல் வள திணைக்கள அலுவலக வளாகத்தில் ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.