வவுனியா பிரதேச செயலகத்தில் மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதி செயலகத்தின் அபிவிருத்தி மற்றும் விசேட கருத்திட்ட பிரிவின் கீழ் பிரதேச செயலக பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலை திட்டங்களை திட்டமிடுவதற்கும், அது தொடர்பான முன்னேற்ற மீளாய்வை மேற்கொள்வதற்குமான கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெற்றுள்ளது.

குறி்த்த நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன், தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட விசேட கருத்திட்ட பணிப்பாளர் பிரபாகணேசன், ஜனநாயக மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் பிரசாத், திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் குறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.